Take a fresh look at your lifestyle.

2

தனுஷின் வாத்தி பட பாடல் வெளியானது

தனுஷ் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் முதல் பாடல் ‘வா வாத்தி’ வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி ‘வாத்தி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா வாத்தி’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் பாடலை எழுத பாடகர் ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். ‘வா வாத்தி’ பாடலை கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‘வாத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.