Take a fresh look at your lifestyle.

கல்பாத்தி அகோரம் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய் சந்திப்பு

4

சென்னை திருவான்மியூரில் கல்பாத்தி அகோரம் என்ற சினிமா நிறுவனத்தின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான நடிகர் நடிகைகள் வந்து கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவுக்கு கலந்துகொள்ள சென்றார். அந்த சமயத்தில் நடிகர் விஜய் வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். முதல்வரை பார்த்து நடிகர் விஜய் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். அதனைக் கண்ட முதல்வர் ஸ்டாலினும் கரங்களை கூப்பி நன்றி தெரிவித்தார்.