Take a fresh look at your lifestyle.

5

 

சினிமா நடிகை தூக்குப் போட்டு தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது

சினிமா நடிகை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவன்யூவில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா (வயது 29). மகிவர்மன் இயக்கத்தில் புகழ் மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள ‘வாய்தா’ படத்தில் தீபா கதாநாயகியாக
நடித்துள்ளார். விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். நேற்று மதியம் தீபா வீட்டுக்குள் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தீபா கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘

ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கை கூடவில்லை.

அதனால் இறக்கிறேன்.
என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’’ என எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக
விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.