மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் ஜனாதிபதி உரை குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் செய்லபாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து தி.மு.க. சார்பில் எடுத்து வைக்கப் பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதித்தது குறித்து நாடா ளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தி.மு.க முடிவு செய்துள்ளது. பங்குசந்தையில் அதானி குழு மத்தால் ஏற்பட்ட இழப்பு குறித்து வெளியான ஆய்வறிக்கை தொடர்பாகவும் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Comments (0)
Add Comment